நமது ரோட்டரி ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒன்றை தன்வசம் வைத்துள்ள ஸ்தாபனமாகும். உலகம் முழுவதிலும் மாநகரங்களிலும், நகரங்களிலும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ரோட்டரியன்கள் சேவை செய்வதற்காக ஒன்று சேர்ந்துள்ளனர். ரோட்டரி நிறுவப்பட்டதிலிருந்து எண்ணிலடங்கா ரோட்டரியன்களும், மற்றவர்களும் ரோட்டரியின் இந்த சேவைகளை ரோட்டராக்ட், இன்டராக்ட், ரோட்டரி சமுதாய குழுமம், இளைஞர் பரிமாற்றம் மற்றும் பிற அமைப்புகள் மூலம் செயல்படுத்தி வருகிறார்கள்.
நாம் அனைவரும் ரோட்டரி குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம். நாம் பெரிய அளவில் ரோட்டரி சேவைகளால் பயன் பெற்றுள்ளோம், நன்மை அடைந்துள்ளோம். நாம் நிறைய நண்பர்களைப் பெற்றுள்ளோம். நாம் சமுதாயத்திற்கு உதவி செய்துள்ளோம்; இப்புவியை மேம்பட்ட, பாதுகாப்பான, ஆரோக்கியமான இடமாகச் செய்துள்ளோம். பல நாடுகளின் சேவகர்களின் கூட்டமைப்பின் ஒரு பகுதியாக உள்ளோம். நாம் நம்முடைய வேற்றுமைகளை ஒதுக்கி விட்டு, ஒன்றாகச் செயல்பட்டோமானால், எவ்வளவு நிறைய சாதிக்கலாம் என்பதை அறிந்துகொண்டுள்ளோம்.
Gray C.K. Huang
RIP 2014-15
பல சிந்தனைகளும், கருத்துக்களும், சிறப்புத்தன்மையும் ரோட்டரிக்கு மட்டுமே உரியது அல்ல. ஏன் என் மனதில் ரோட்டரி ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது என்றால், சைனாவின் பல மதிப்பான பாரம்பரியமான தத்துவங்களை ரோட்டரியில் காணலாம். அவை என்னவெனில், சேவையை மதித்தல், பொறுப்புகளை மதித்தல், குடும்பத்திற்கும் மற்றவர்களுக்கும் மதிப்பளித்தல் ஆகியவை ஆகும்.
கன்ஃபூசியஸின் சித்தாந்தங்கள், தத்துவங்கள் என்னுடைய ரோட்டரி சேவையை வழிநடத்துகிறது என்றால் ஆச்சரியமில்லை. என்னைப் பொறுத்தவரையில் கன்ஃபூசியஸ் அவர்கள்தான் முதலாவது – மூல ரோட்டரியன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பால் ஹாரிஸ் பிறந்துவிட்டார். கன்ஃபூசியஸ் கூறினார்:
உலகம் சரியாக அமையவேண்டுமானால், முதலில் நாட்டை சரியாக வைக்கவேண்டும். நாடு சரியாக அமையவேண்டுமானால் வீடு, குடும்பம் சரியாக இருக்கவேண்டும். குடும்பம் சரியாக அமைய வேண்டுமானால் நம் மனதை சரிவர அமைக்க வேண்டும்.
ரோட்டரியில் நம் மனதை எப்படி சரியாக அமைக்கிறோம் என்றால் சொந்த நலனைக்கருதாமல் சேவை செய்கிறோம் (Service Above Self). நாம் சேவையில் ஆர்வமுடன் இருக்கவேண்டுமானால் நம்முடை ய ஸ்தாபனத்தை முதலில் கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும். ரோட்டரிக் குடும்பத்தை விரிவுபடுத்த வேண்டும். 2014-15ம் ஆண்டில் நான் உங்களை கேட்டுக்கொள்வது என்னவென்றால் Light Up Rotary – ரோட்டரியின் மேல் ஒளி வீசட்டும். ரோட்டரிக்கு ஒளி கொடுங்கள். எவ்வறெனில், நம் சேவையை பலரும் பகிர்ந்து கொள்ளட்டும். கிளப்புகளை வலிமை அடையக் செய்யட்டும். நம்முடை ய ஒளி சமுதாயத்தின் மீது வீசட்டும்.
இந்த ரோட்டரி ஆண்டில் ரோட்டரியங்களின் எண்ணிக்கையை 1.3 மில்லியனாக உயர்த்துவது நம் இலக்கு. புதிய உறுப்பினர்களைச் சேர்பதும், எற்கனவே உள்ளவர்களை தக்க வைக்கப்பணிப்புரிவதும் இதில் அடங்கும். புதிய சிந்தனைகளும், புதிய வழிகளும் இந்த இலக்கை அடைய வழிவகுக்கும். “ரோட்டரி தினம்” என்று கொண்டாடுங்கள். சமூக மக்களை அழைத்து ரோட்டரி குறித்து அறிந்து கொள்ள ஒரு சந்தர்பத்தை உருவக்குங்கள். ரோட்டரி என்பது ஒரு குடும்பம் மற்றும் ரோட்டரி எனபது குடும்பத்திற்காக உள்ளது. உங்கள் வாழ்கைத் துணை மற்றும் குடும்ப உறுப்பினர்களை ரோட்டரி உறுப்பினர்களாகக் கருத்தில் கொள்ளவும். இளைஞர் பரிமாற்றத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தவர்களையும் சென்று பார்க்கவும். உங்கள் கிளப்பிலும் கவனம் செலுத்துங்கள். ஏன் உறுப்பினர்கள் வெளியேறுகிறார்கள் ஏன் உறுப்பினர்கள் தொடர்ந்து இருக்கிறார்கள் எனப்தை ஆராயுங்கள். எப்பொழுதும் வேலைப் பளுவில் இருக்கும் தொழில் வல்லுனர்களையும், இளைஞர்களைக் கொண்ட குடும்பத்தினரையும் எவ்வாறு ரோட்டரியில் ஈர்ப்பது எனபதை ரோட்டரியன் என்ற முறையில் ஆராயவும்.
போலியோவை ஒழித்து ரோட்டரியின் மேல் ஒளி பாய்ச்சுவோம். சரித்திரம் படைப்போம். இதேபோல் வேகமாக பணியாற்றினால் இன்னும் சில ஆண்டுகளில் போலியோ ஒழிப்பு முழுமையாக அடையக்கூடியதே. போலியோவை இப்பொழுதே ஒழிப்பது எவ்வளவு நேருக்கடியானது, அவசியமானது என்று உங்கள் நண்பர்கள், உடன் பணி புரிபவர்கள், தேரிந்தெடுக்கப்பட்ட அலுவலர்கள் அனைவரிடமும் கூறுங்கள். நீங்களும் மற்றவர்களும் போலியோ பிளஸ் நிதிக்கு நன்கொடை அளியுங்கள்.
பில் & மிலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் மிகப்புதிய அறைக்கூவலினால் நாம் வழங்கும் நிதியைப் போல் 3 மடங்கு நிதி பெருக்கலாம். உலகளவில் பொதுத்துறை தனியார் துறை கூட்டு முயற்சியால் செய்யப்படும் இந்த சுகாதாரப் பணியில் நீங்களும் ஒரு பகுதியாக விளங்கவேண்டும். போலியோ ஒழிப்பு பணி முடிந்தவுடன் அந்த பெருமையை அள்ளிக்கொண்டு செல்லுங்கள்.
2014-15ம் ஆண்டில் நம் சங்கங்களை வலுப்படுத்துங்கள். 34000 சங்கங்களை ஒளி ஏற்றி காண்பியுங்கள். நம்முடைய சேவை செய்யும் மனப்பான்மையும் மற்றும் உறுதியும் – சேவைகளும் உலகத்திற்கு ஒளி ஏற்றும்.
– Gray C.K. Huang
President, Rotary International 2014-15
RI President 2014-15 அவர்களின் செயல் வாக்கிய விளக்கம்-ரோட்டரி இண்டர்நேஷனல் அசம்பளியில் நிகழ்த்திய உரை. நன்றி: தமிழாக்கம் PP Rtn.N.P. ராமஸ்வாமி, RC of இராசிபுரம்.