waterகுடிதண்ணீர் மற்றும் சுகாதாரம்(Water and Sanitation)

1. சுகாதாரமும் சுத்தமும்(Sanitation and Hygiene)

செய்தி:

  • 260 கோடி மக்கள் போதிய சுகாதார வசதிகள் இல்லாமல் வாடுகிறார்கள்.

நீங்கள் செய்யவேண்டியவை:

  • சுகாதார கழிப்பிடங்களை நிறுவி அவைகளிலிருந்து வெளியேறும் நீரை பாதுகாப்பான சாக்கடைகளில் இணைத்து விடுங்கள்.

நீங்கள் புரியும் சேவையின் வெற்றிக்கு சில ஆலோசனைகள்:

  • உயர் தொழில்நுட்ப முறைகளைக் கையாளாதீர்கள். சுலபமான முறைகளைக் கையாண்டால் தொடர்ந்து செயல்பட ஏதுவாகும்.
  • நினைவில் கொள்ளுங்கள்: தண்ணீர் கிடைக்காமல் தாகத்தினால் இறப்பவர்கள் குறைவு. ஆனால் தடுக்கக்கூடிய தண்ணீரினால் உண்டாகும் நோய்களினால் லட்சக்கணக்கில் இறக்கிறார்கள்.

செய்தி:

  • ஒவ்வொரு நாளும் 6,000 குழந்தைகள் போதிய சுகாதார வசதிகளும், பாதுகாப்பற்ற தண்ணீரினாலும் இறக்கிறார்கள்.

செய்யவேண்டியன:

  • சுத்தமாக இருக்க பழக்கவழக்கங்களை கற்றுத்தரவும். கையை சோப்புப் போட்டு கழுவும் முறையால் 45 சதவீதம் வயிற்றுப் போக்கைத் தவிர்க்கலாம்.

2. நீர் எடுக்கும் இடங்களுக்கு சுலபமாக அடைவது மற்றும் நீரின் தன்மையை மேம்படுத்துவது.(Improve Access to Water and Water Quality)

செய்தி:

  • ஒவ்வொரு நாளும் ஆப்பிரிக்க பெண்களால் தண்ணீர் கொண்டுவர 6 மணி நேரம் செலவிடப்படுகிறது.

நீங்கள் செய்யவேண்டியவை:

  • மழைநீர் சேமிப்புத்திட்டத்தைச் செயல்படுத்துங்கள். மழைநீரை சேமித்து குடிக்கவும், பாசனம் செய்யவும், நிலத்தடி நீரை உயர்த்துவதும் இத்திட்டத்தின் பயனாகும்.

செய்தி:

  • 90 கோடி மக்கள் சுத்தமான குடிநீர் இல்லாமல் தவிக்கிறார்கள்.

நீங்கள் செய்யவேண்டியவை:

  • கிணறுகள் வெட்டவும், வீட்டில் பயன்படுத்தும் மணல் மற்றும் செராமிக் வடிகட்டிகள்(filters) பயன்படுத்தவும்.
  • குறைந்த விலையில் இதற்குத் தீர்வு காணுங்கள். குளோரின் மாத்திரைகள் பிளாஸ்டிக் பாத்திரங்களில் நீரை நிரப்பி வெய்யிலில் வைத்து தண்ணீரின் தரத்தை உயர்த்தலாம்.

நீங்கள் புரியும் சேவையின் வெற்றிக்கு சில ஆலோசனைகள்:

  • தண்ணீர் தொடர்பான பிரச்சனைகளுக்கு உள்ளூர் மக்களையும் கலந்தாலோசித்து தேவைகளுக்கேற்ப தீர்வு காணுங்கள்.
  • கிணறு அல்லது ஆல்குழாய்க் கிணறு தோண்டும்முன் சுற்றுப்புறச் சூழல் பாதிக்காமல் இருக்கவேண்டும். நீர் தொடர்ந்து கிடைக்க வேண்டும்.
  • நீர்த்திட்டங்களைத் தொடர்ந்து பராமரிக்க உள்ளூர் நலவிரும்பிகளிடம் ஒப்படையுங்கள். இத்திட்டம் வெற்றி பெறும்.
நன்றி: Rotary News – Apr 2013, தமிழாக்கம் PP Rtn.N.P. ராமஸ்வாமி, RC of இராசிபுரம்.