ரோட்டரி சமுதாய குழுமம் (Rotary Community Corps)

rccRCC என்பது ரோட்டரி சங்கத்தால் ஆதரிக்கப்படும், தங்களுடைய சமுதாயத்தின் முன்னேற்றம் மற்றும் தன்னிறைவுக்காக உறுதிபூண்ட ரோட்டரிசங்கத்தில் உறுப்பினரல்லாத ஆண்கள் மற்றும் பெண்களைக்கொண்ட ஒரு குழுவாகும். இதன் தத்துவம், ரோட்டரி சமுதாய குழும உறுப்பினர்கள் தாங்கள் வசிக்கும் மற்றும் வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் தேவைகளை அடையளம் கண்டு தாங்களே தீர்வுகாண்பதாகும். Rotaract மற்றும் Interact-ஐ போல RCC ம் ரோட்டரியுடன் இனைந்து சேவை செய்வதில் ரோட்டரியின் பங்குதாரர். இது 1985ம் ஆண்டு அப்பொழுது சர்வதேச ரோட்டரியி தலைவர் தேர்வாக இருந்த M.A.T. Caparas ஆல் அறிமுகப்படுத்தப்பட்டு 1988ம் ஆண்டு இது ஒரு ரோட்டரியின் சேவை திட்டமாக சர்வதேச ரோட்டரியால் அங்கீகரிக்கப்பட்டது.

RCC தொடங்குவது நீடித்த சேவை திட்டங்களை ஆரம்பிக்க மற்றும் செயல்படுத்த ஒரு சிறந்த வழி ஆகும். பாதுகாப்பான தண்ணீர், பட்டினி, மாசு, கல்வியறிவின்மை, மற்றும் போதுமான வீடுகள் இல்லமை போன்ற சில சமுதாய பிரச்சனைகளுக்கு ஆக்கபூரிவமான மற்றும் நிலையான தீர்வுகளை RCC மேற்கொள்கிறது. உள்ளூர் சமுதாயத்துடன் ஆலோசன நடத்த, தேவைகளை அடையாளம் காண, திட்டம் தீட்ட, செயல் படுத்த, கண்காணிக்க மற்றும் ஒரு திட்ட மதிப்பீடு செய்ய ஆகிய காரணங்களுக்காக RCC அதனை ஆதரிக்கும் ரோட்டரி சங்கங்களுடன் இணைந்து செயல்படுகிறது.

மருதம் 2014 – RCC மாவட்ட மாநாடு

marudham-l

இடம்: கும்பகோணம், ஸ்ரீ பாலாஜி மஹால் – பச்சையப்பா தெரு.

நாள்: மே-மாதம் 4ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை

பதிவு கட்டணம்: ரூ. 150.

மாநாடு குறித்த சிற்றேடு:  மருதம் 2014