maternalதாய் சேய் நலம்(Maternal and Child Health)

1. குழந்தை ஆரோக்கியம்(Child Health Care)

செய்தி:

  • 5 வயதுக்கு கீழ் 90 லட்சம் குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் சத்துக் குறைவாலும், ஆரோக்கியமின்மையாலும் சுகாதாரக் குறைவாலும் இறக்கிறார்கள்.

நீங்கள் செய்யவேண்டியவை:

  • தடுப்பு மருந்துகளும், ஆண்டிபயாடிக்ஸ்களும் வழங்கவும், தட்டம்மை,மலேரியா, நிமோனியா, எய்ட்ஸ் மற்றும் வயிற்றுப் போக்கு முதலிய நோய்கள் குழந்தைகள் இறப்பிற்குக் காரணங்கள்.
  • சத்துணவு வழங்கவும், தாய்ப்பால் புகட்ட தாய்மார்களை ஊக்குவிக்கவும், தாய்ப்பல் புகட்டப்பட்ட குழந்தைகள் அதிக சத்துடனும், நோய் எதிர்ப்பு சக்தியுடனும் இருக்கிறார்கள்.
  • தாயிடமிருந்து சேயிற்கு HIV பரவாமல் இருப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

2. கர்ப்பகால மற்றும் பிரசவ காலப் பாதுகாப்பு(Antenatal Care and Child Birth)

செய்தி:

  • ஆப்பிரிக்காவில் 5 சதவீத கர்ப்பிணிகள் கர்பந்தரித்திருக்கும் போதோ அல்லது பிரசவத்தின் போதோ இறக்கிறார்கள்.

நீங்கள் செய்யவேண்டியவை:

  • சுகாதார தொழில் நிபுணர்களுக்குத் தேவையான பிரசவ சமயத்தில் பயன்படும் பொருட்கள் அடங்கிய கைப்பொருட்களை (Kits) வழங்குங்கள்.

செய்தி:

  • 80 சதவீத தாய்மார்களின் இறப்பு – பயிற்சி பெற்ற சுகாதார தொழில் சேவகர்கள் மூலம் தடுக்க முடியும்.

நீங்கள் செய்யவேண்டியவை:

  • ஒப்புக்கொள்ளப்பட்ட அங்கீகரிக்கப்பட்டப் பயிற்சித் திட்டங்களுக்கு எல்ல விதங்களிலும் ஆதரவு அளியுங்கள்.

நீங்கள் புரியும் சேவையின் வெற்றிக்கு சில ஆலோசனைகள்:

  • பயிற்சித் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த உள்ளூர் மக்களை அழைத்து ஒப்படையுங்கள்.
  • ஏற்கனவே பிரசவகால, கர்ப்பகால பாதுகாப்புகளில் பயிற்சி பெற்ற ரோட்டேரியங்களை கலந்தாலோசித்து தேவையான பயிற்சி முகாம்களைச் செயல்படுத்டுங்கள்.
  • இத்துறையில் முன்னணியில் உள்ள வேறு நிறுவனங்களுடன் கைகோர்த்து செயல்படுங்கள்.

3. குடும்பக்கட்டுபாடு(Family Planning)

செய்தி:

  • வளரும் நாடுகளில் 40 சதவீதம் பேர் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவதில்லை.
  • 5.3 கோடி தேவையற்ற விருப்பமில்லாத கர்ப்பங்களை குடும்பக் கட்டுபாடு முறைகளால் தடுக்கலாம்

நீங்கள் செய்யவேண்டியவை:

  • மக்கள் குடும்பக்கட்டுபாடு முறைகளை அறியும்படி வழி செய்யுங்கள். இவ்வாறு செய்வதால் 30 சதவீத இறப்புகளைத் தவிர்க்கலாம்.

நீங்கள் புரியும் சேவையின் வெற்றிக்கு சில ஆலோசனைகள்:

கலாச்சார ரீதியாக மக்களை அணுகி குடும்ப்பக் கட்டுபாடு முறைகளை அறியும்படி செய்யவும். இவ்வாறு செய்தால் இத்திட்டம் வெற்றிபெறும்.

நன்றி: Rotary News – Apr 2013, தமிழாக்கம் PP Rtn.N.P. ராமஸ்வாமி, RC of இராசிபுரம்.