economicபொருளாதார மற்றும் சமுதாய வளர்ச்சி(Economic And Community Development)

1. வருவாய் மற்றும் சேமிப்பு(Income Generation & Savings)

செய்தி:

  • 19 கோடி மக்கள் குறு மற்றும் சிறிய கடன் வசதிகள் கொண்ட நிதித் திட்டங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

நீங்கள் செய்யவேண்டியவை:

  • நீங்கள் உள்ளூரிலுள்ள குறு நிதி நிறுவனங்களுடன்(Microfinance Institution) கூட்டக இணைந்து பொது மக்களுக்கு நிதி அடிப்படைத் தேவைகளுக்கு உதவவும்.
  • வளரும் சமுதாயத்தில் செல்போன்கள் மூலமாக வங்கிக் கணக்குகளை செயல்படுத்துவது மிகவும் நன்று. வங்கியுடன் உள்ள தொடர்புகளை மேம்படுத்துவதற்கு இது வழிவகுக்கும்.

நீங்கள் புரியும் சேவையின் வெற்றிக்கு சில ஆலோசனைகள்:

  • சேவைத்திட்டங்களை செயல்படுத்தும்போது தேவையான பொருட்கள் வாங்குவது, வழங்குவது ஆகியவைகளை உள்ளூரிலேயே செய்யுங்கள். இதனால் உள்ளூர் பொருளாதாரம் மேம்படும்.
  • ரோட்டரி சமுதாய குழுமம் RCC அமையுங்கள். இந்தக் குழுமத்தின் உறுப்பினர்களுக்கு சமுதாயத்தின் பொருளாதார தடைகள் குறித்து அறிவார்கள். தடைகளை நீக்க  தீர்வுகள் காண அவர்களுக்குத் தெரியும்.

2. வேலை வாய்ப்பு ஏற்படுத்தலும் முதலீடு செய்வதும்(Job Creation & Entrepreneurship)

செய்தி:

  • 140 கோடி மக்களில் பாதிக்கு மேல் வேலை செய்து நாளைக்கு 1.25 டாலர்கள்தான் சம்பாதிக்கிறார்கள்.

நீங்கள் செய்யவேண்டியவை:

  • ஜனநாயக முறையில் செயல்படும் கூட்டுறவு (நிறுவனங்கள்) சங்கங்களுடன் கூட்டாக செயல்படுங்கள். இந்த கூட்டுறவு நிறுவனங்கள் தம் உறுப்பினர்களுக்கு பயிற்சியும், பொருளாதார முன்னேற்றத்திற்கு கூட்டாகத் திட்டங்களைச் செயல்படுத்தியும் சொத்துக்கள் சேர்பதில் உதவியும் செய்பவைகளாக இருக்க வேண்டும்.
  • தொழில் பயிற்சிக் குழுக்களை(Vocational Training Team) அனுப்பி மக்களுக்கு வணிகத் திட்டங்களை திட்டமிடுதளையும் கணக்கு வழக்குகளை நிர்வகிப்பதிலும் பயிற்சி அளிக்கப்படும்.
  • கூட்டுறவு சங்கங்களுக்கு கருவிகளையும் மற்ற பொருட்களையும் வழங்கி உற்பத்தியையும் விற்பனையையும் பெருக்க வழி செய்யவும்.
  • தொழில் பயிற்சித் திட்டங்களை விரிவுப்படுத்துங்கள். வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் திட்டங்களை உள்ளூர் லாப நோக்கமில்லா நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்துங்கள்

நீங்கள் புரியும் சேவையின் வெற்றிக்கு சில ஆலோசனைகள்:

  • உள்ளூர் சிறூமுதலீட்டாளர்களுக்கு உதவி செய்யுங்கள். இவர்களின் வெற்றி உள்ளூரில் பலமடங்கு வேலை வாய்ப்பினைப் பெருக்கும்.
நன்றி: Rotary News – Apr 2013, தமிழாக்கம் PP Rtn.N.P. ராமஸ்வாமி, RC of இராசிபுரம்.