மாவட்ட பயிற்சி பேரவை

fire2014-logoநமது ரோட்டரி மாவட்டம் 2980 ன் மாவட்ட பயிற்சி பேரவை (District Training Assembly)  “FIRE 2014” நமது மாவட்ட ஆளுநர் தேர்வு Rtn. S.P.பாலசுப்ரமணியம் அவரிகளின் நேரடி வழிகாட்டுதலின்படி, ரோட்டரி வருடம் 2014-15ம் ஆண்டில் சங்க அளவில் பொறுப்பேற்கவிருக்கும் பொறுப்பாளர்களை பயிற்றுவிக்கும் நோக்கத்தோடு, வருகின்ற மே மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நாமக்கல்லில் National Public School மற்றும் ஹோட்டல் NALA-வில், நாமக்கல்லின் அனைத்து ரோட்டரி சங்கங்களால் நடத்தப்படவுள்ளது.

இதில் சங்க அளவில் பொறுப்பேற்கவிருக்கும் தலைவர்கள் –

  • ரோட்டரியில் உறுப்பினர்களை தக்கவைத்துக்கொள்வதோடு உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது.
  • ரோட்டரியின் வாயிலாக நமது சமுதாயத்திற்கும் பிற நாடுகளில் உள்ள சமுதாயத்திற்குமான தேவைகளை நிறைவேற்றும் வகையில் திட்டங்களை செயல்படுத்துவது.
  • ரோட்டரி அறக்கட்டளையின் திட்டங்களில் பங்கு பெற்று அதற்கு ஆதரவளிப்பதோடு ரோட்டரி அறக்கட்டளைக்கு நிதி வழங்கி ஆதரிப்பது.

ஆகியவற்றை செயல்படுத்துவதற்கு ஏதுவாக ரோட்டரி குறித்த செயல்திறமை, தகவல் மற்றும் செயல் ஊக்கம் ஆகியவற்றை பயிற்றுவிக்கும் வகையில் இந்த மாவட்ட பயிற்சி பேரவை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

ரோட்டரி மாவட்ட மற்றும் மண்டல அளவில் பொறுப்பேற்கவிருக்கும் அனைவரும் இந்த பயிற்சி பேரவையில் பங்குபெற அழைக்கப் படுகிறார்கள். மேலும் ரோட்டரி குறித்த பல தகவல்கள் மற்றும் ரோட்டரியின் புதிய திட்டங்கள், கொள்கையளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கல் ஆகியவற்றை அறிந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைவதால் அனைத்து ரோட்டரியன்களும் இந்த பயிற்சி பேரவையில் கலந்துகொள்வதற்கு ஊக்கபடுத்தப்படுகிறார்கள்.

சர்வதேச ரோட்டரி தலவரின் “செயல் வாக்கியத்தை” ஆளுநர் தேர்வு அவர்கள் அனைத்து ரோட்டரியன்களுக்கும் அறிமுகப்படுத்தி அதன் பொருளை விவரிக்கும் சிறப்பு நிகழ்வும் இந்த பேரவையின் ஒரு முக்கிய அங்கமாகும். மேலும் மாவட்ட அளவிலான முக்கிய அறிவிப்புகளும் மாவட்ட ஆளுநர் தேர்வு அவர்களால் வெளியிடப்படும்.

இந்த பேரவையின் ஒரு பகுதியாக நடைபெரும் “மானியம்” குறித்த கருத்தரங்கில், ஒரு சங்கத்தின் தலைவர் தேர்வு மற்றும் செயலர் தேர்வு பங்குபெற்று மானியம் குறித்த புரிந்துனர்வு படிவத்தை ஏற்றுக்கொள்வது அந்த சங்கம் ரோட்டரியின் மானிய உதவியுடன் திட்டங்களை நிறைவேற்ற சர்வதேச ரோட்டரியின் “மானியம்” பெறுவதற்கான தகுதிகளில் ஒன்றாகும்.

நண்பர்களே, இந்த மாவட்ட பயிற்சி பேரவையில் பங்கு பெற 30-04-2014ம் தேதிக்குள் முன்பதிவு செய்து, இந்த பேரவை மிக சிறப்பாக நடைபெற நமது பங்களிப்பை வழங்குவோம்.

மேலும் விவரங்களை, கீழே உள்ள இனைப்பில்:

மாவட்ட பயிற்சி பேரவை குறித்த அறிவிப்பு

மாவட்ட பயிற்சி பேரவைக்கு முன் பதிவு செய்வதற்கான படிவம்

2 thoughts on “மாவட்ட பயிற்சி பேரவை”

Leave a comment